உள்நாட்டு செய்திகள்

சோபித தேரரின் மரணம் குறித்து வைத்தியர்களை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.



நீதி­யான சமூ­கத்­திற்­கான அமைப்பின் தலைவர் மாதுலு­வாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில், அவர் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த போது அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த வைத்­தி­யர்­களை விசாரணை செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

சோபித தேரரின் மரணம் குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள விசா­ரணைக் குழு இந்த தீர்­மா­னத்­துக்கு வந்­துள்­ளது. அதன்­படி மாது­ளு­வாவே சோபித்த தேர­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த பல வைத்­தி­யர்­களை விசா­ரணை செய்ய கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­டிய விசா­ரணைக் குழு­வுக்கு நேற்று அனு­மதி வழங்கியுள்ளார்.

சோபித்த தேரரின் மரணம் குரித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் குழுவின் தலை­வ­ரான கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் நாயகம் வைத்தியர்  அனில் ஜய­சிங்கஇ நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பிலபிட்டியவிடம் முன்­வைத்த எழுத்து மூல கோரிக்­கையை ஆராய்ந்தே, சிகிச்சையளித்த  வைத்தியர்களிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

Related posts

கீதா குமாரசிங்கவின் மேன்முறையீட்டை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு..

wpengine

தேர்தல் ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கப்படும்

wpengine

சொதியில் உப்பு கூடிவிட்டது என்பதற்காக மனைவியை விவாகரத்து செய்யமுடியாது என்பதாலேயே பட்ஜெட்டுக்கு ஆதரவு..!

wpengine