உள்நாட்டு செய்திகள்

சொத்து விபரங்களை உரிய முறையில் வெளியிடத் தவறிய துமிந்தவுக்கு ரூ.3000 அபராதம்..



2011 – 2013 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சொத்து விபரங்களை உரிய முறையில் வெளியிடத் தவறியமையினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஒத்துக் கொண்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று(06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். குறித்த ஒப்புதலுக்கு அமைய அவருக்கு ரூ. 3000 தண்டப்பணம் விதிக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் மோசடி ஒழிப்பு ஆணைக்குழு துமிந்த சில்வா மீது குறித்த வழக்கினை தொடர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது…

wpengine

பிரதமர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine

ஸ்ரீ.சு.கட்சி தேர்தலுக்கான மீள் விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானம்

wpengine