உள்நாட்டு செய்திகள்

‘சைலன்ஸ் இன் த கோட்’ திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை.


பிரசன்ன விதானகேவின் சைலன்ஸ் இன் த கோட் (Silence in the Courts) என்ற ஆவணத் திரைப்படத்தை வௌியிட, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு பெண்கள் நீதிபதி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆவணத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஆவணத் திரைப்படத்தின் மூலம் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இயக்குனர் கூற முற்பட்டுள்ளதாகவும், நாளை குறித்த திரைப்படத்தை காட்சிப்படுத்தத் தயாராகி வருவதாகவும், முன்னாள் நீதியரசர் லெனின் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி படம் வௌியானால் தனக்கு மட்டுமல்லாது இலங்கை நீதித்துறை கட்டமைப்புக்கே பாரிய அவமதிப்பு ஏற்படும் எனக் கூறியுள்ள அவர், இதனை வௌியிட இடைக்காலத் தடை விதிப்பதோடு, நிரந்தரமான தடைக்காக நோட்டீஸ் வௌியிட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் குறித்த ஆவணத் திரைப்படத்தை வௌியிட, எதிர்வரும் 19ம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

wpengine

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட சமனலகம பகுதியில் மண்சரிவு

wpengine

A/L பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும்..!

wpengine