உள்நாட்டு செய்திகள்

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த முயற்சியின் மூலம் தரவுகள் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் நிறைவேற்றதிகாரி தெரிவித்தள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்காலங்களில் இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவினால் செயலணியொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

wpengine

தேர்தலுக்கு பணம் வழங்க முடியாவிட்டால்,முன்னின்ற அரச ஊழிய வேட்பாளர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள் : சபையில் சஜித்

News Editor

ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலத்தினை பாராளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி…

wpengine