உள்நாட்டு செய்திகள்

சைட்டம் நெருக்கடிக்கு தீர்வின்றேல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகள்…



சர்ச்சைக்குரிய மாலபே, சைட்டம் பிரச்சினைக்கு எதிர்வரும் வாரத்தினுள் நியாயமான தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

சைட்டம் நெருக்கடி மற்றும் அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பாக நாட்டில் கருத்தரங்கு ஒன்றை நடத்தி பொது மக்களுக்கு தெளிவுபடுத்தப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அரச மருத்துவமனைகளில் கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக அவர் நேற்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அமைச்சரின் உத்தரவிற்கு அமைய சில மருத்துவமனைகளில் கறுப்புக் கொடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் பொது செயலாளர் நவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்

Related posts

கந்தான, மஹாபாகே ஆகிய பகுதிகள் முடக்கம்

wpengine

ஆஸி வேகப்பந்துவீச்சாளர் நாதன் முரளியிடம் பயிற்சி கோருகிறார்

wpengine

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் கடமைகளை பொறுபேற்றார்…

wpengine