உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை ஒருபோதும் அரசு பொறுப்பேற்கப்பட மாட்டாது..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி ஒருபோதும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(13) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அனைத்து கல்லூரிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றால் முதலீடு செய்ய ஒருவரும் முன்வர மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறும் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

(rizmira) 

Related posts

பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடும்

wpengine

பத்திரிகை சபையினை மீள் உருவாக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா கண்டனம்

wpengine

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

wpengine