உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை இரத்து செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை இரத்து செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வரையில் காத்திருக்காது தனியார் மருத்துவ கல்லூரியை இரத்து செய்ய வேண்டுமென கோரியுள்ளது.

இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள ஜாதிக ஹெல உறமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவ மாணவியருக்கு நியாயமான ஓர் தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த இந்தப் பல்கலைக்கழகத்தையும் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு வீதியில் தீர்வுத் திட்டமொன்றை வழங்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரக ஊழியர்கள் அனைவருக்கு கொரோனா..!

wpengine

பட்டாசு தொழிற்சாலையில் தீ : ஒருவர் உயிரிழப்பு

wpengine

மேலும் 4 ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்

News Editor