உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில்…



சைட்டம் தனியார் கல்லூரியினை மூடுமாறு கோரி இன்று(13) கொழும்பு பல்கலையின் அழகியற் கலைப் பிரிவின் முன்னாள் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சைட்டம் நிறுவனம் குறித்து இன்று(13) மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,மருத்துவபீட உயர் அதிகாரிகள், உயர் கல்வியமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும், அது குறித்து மாணவர் இயக்கங்கள் எவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த லஹிரு; அதற்கும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

(rizmira)

Related posts

தவறான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த இலங்கை அதிகாரிகள்..!

wpengine

மேலும் 479 பேர் குணமடைவு

wpengine

இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் பதற்ற நிலை..

wpengine