உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் குறித்த தீர்மானம் மிக்க அரசின் இறுதித் தீர்மானம் இன்று..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான அரசின் இறுதித் தீர்மானத்தை எழுத்து மூலம் இன்று(28) பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, ஜனாதிபதியின் சார்பாக குறித்த இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாக சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமந்த ஆனந்த குறிப்பிட்டார்.

இந்நிலையில், மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் இன்றைய தினம் முக்கியமான தீர்மானம் ஒன்று எட்டப்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான விடயத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் எனவும் தாம் எதிர்ப்பார்ப்பதாக சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு கண்டி வைத்தியசாலைக்கு விரைகிறது…

wpengine

மதூஷுடன் துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்க விஷேட குழு நியமனம்…

wpengine

மஹிந்தவின் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஸ்ரீ.சு.க. உறுப்பினர்கள் தொடர்பில் கலந்துரையாடல்..

wpengine