உள்நாட்டு செய்திகள்

சைட்டம் எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கும் இலக்கு..



சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்து வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எவற்றையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தாததால் சைட்டம் எதிர்ப்பு போராட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் வேலை நிறுத்தத்திற்கும் தயாராக வேண்டி வரும் என குறித்த சங்கம் அரசுக்கு எச்சரித்துள்ளது.

மாலபே, சைட்டம் நிறுவனம் கடந்த 31ம் திகதி முதல் மூடப்படும் என இது குறித்து ஆராயும் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும், அது குறித்த எவ்வித நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என வைத்திய பீட மாணவர்களது பெற்றோர்களது சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

#reeshmaa..

Related posts

1000 ரூபா சம்பள விவகாரம்: பெருந்தோட்ட கம்பனிகளின் மனு தள்ளுபடி

wpengine

புதினுக்கு ஐ.எஸ் அமைப்பு எச்சரிக்கை

wpengine

இலங்கை மத்திய வங்கியிடம் தகவல்களை கோருகிறது கோப் குழு

wpengine