உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டத்திற்கு எதிரான மனு விசாரணையிலிருந்து நீதிபதி விஜித் விலகல்..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ பட்டங்களை வழங்க சட்ட ரீதியிலான அதிகாரம் உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை வைத்திய சபையினால் மேன்முறையீடு செய்த மனுவினை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மழல்கொட அதன் விசாரணைகளில் இருந்து விலகுவதாக நேற்று(31) அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் சைட்டம் நிறுவனம் குறித்த விசாரணைகளின் தீர்ப்புகளில் தான் பங்கேற்றதாகவும் ஆதலால் குறித்த மனு விசாரணைகளில் இருந்து விலகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த மனு விசாரணை சிசிர டி ஆப்ரா, அனில் குணரத்ன மற்றும் விஜித் மழல்கொட ஆகிய நீதிபதிகளது குழுவால் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை மீட்டெடுக்க முடியும் – ஜனாதிபதி

wpengine

” இராணுவ சிப்பாயாக, பாதுகாப்பு செயலாளராக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நீங்கள் ஆற்றிய சேவைகளை போற்றுகின்றோம்.” – மொட்டு கட்சி

News Editor

அஸ்ட்ராசெனகா நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை

wpengine