உள்நாட்டு செய்திகள்

சைட்டத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்புப் போராட்டம் இன்று நுகேகொடையில்…



சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியினை இரத்து செய்யக் கோரி இன்று(05) பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நுகேகொடையில் நடைபெறவுள்ளதாக அனைத்துப் பல்கலை மாணவர் ஒன்றிய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மங்கள மத்துமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த எதிர்ப்புப் போராட்டத்திற்காக அரசியல் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துவோர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பாரிய சனத்தொகை ஒன்று பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போரட்டத்தினை ஆரம்பிக்க முன்னர் பிற்பகல் 1.00 மணியளவில் விஜேராம,கிருலப்பன்ன மற்றும் களுபோவில ஆகிய மூன்று இடங்களில் இருந்தும் மூன்று எதிர்ப்புப் பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒன்று சேரவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஒரு பிரிவில் தீ பரவல்…

wpengine

சைட்டம் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்..

wpengine