உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா சந்தவ்மி பாலியல் கொலை வழக்கு – இம்மாத இறுதியில் இறுதித் தீர்ப்பு


கொட்டதெனியாய பகுதியில் சிறுமி சேயா சந்தவ்மி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ஆம் திகதி வழங்கப்படும் என, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னதாக 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, குற்றம் நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் கைதான சமன் ஜெயலத் (துனேஷ் பிரியஷாந்தவின் சகோதரர்) என்பவர் குற்றத்தை தானே இழைத்ததாக வாக்குமூலம் அளித்ததோடு அவரது மரபணுக்கள் குற்றத்துடன் ஒத்துப்போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பானது இந்த மாதம் 15ஆம் திகதி வழங்கப்படும் என நீர்கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

TNA மற்றும் CWC இனது மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய தீர்மானம்…

wpengine

பங்களாதேஷ் அணிக்கு வாழ்த்துக்கள் – இலங்கை அணியின் திறமையில் ஒருபோதும் திருப்தியில்லை – சந்திமால்..

wpengine

எம்பிலிபிட்டி பொலிஸாரை கைது செய்யுமாறு பரிந்துரைக்கவில்லை – ருவான்

wpengine