உள்நாட்டு செய்திகள்

சேனா படைப்புழு ஒழிப்புக்கு நிதி ஒதுக்குமாறு பிரதமர் பணிப்புரை…



சேனா படைப்புழுக்களை ஒழிப்பதற்கான தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தப் புழுவை அழித்தல் மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கல் என்பது தொடர்பில், வாரந்தோறும் எழுத்துமூலம் அறியத்தருமாறு, விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசனுக்கு, பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது, சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக, இதுவரையில் ஐந்து வகை இரசாயனப் பதார்த்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த இரசாயனப் பதார்த்தங்களை, மனித சுகாதாரத்துக்கு பாதிப்பற்ற வகையில் பயன்படுத்த வேண்டுமென்று அமைச்சர் கோரியுள்ளார்.

Related posts

இன்று முதல் சூரியன் இலங்கையில் உச்சம் கொடுக்கும்…

wpengine

இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான தீர்வை வரி அதிகரிப்பு…

wpengine

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்…

wpengine