Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

செவ்வாய்க்கிழமை ஒன்றரை மணி நேரம் அமர்வு – ஒரு கோடி ரூபாய் நாசம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிக்கையொன்றை முன்வைப்பதற்காக பாராளுமன்றம் கூட்டப்பட்டது.

ஜனாதிபதியின் உரையின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டதை அடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த அமர்வு ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடைபெற்றது.

சபை அமர்வு குறுகியதாக இருந்தாலும், பொதுவாக ஒரு பாராளுமன்றக் கூட்டத்தின் ஒரு நாளுக்குச் செலவிடப்படும் தொகையே குறுகிய கூட்டங்களுக்கும் செலவாகும் என்று பாராளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

Related posts

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி இவ்வாரத்தினுள் வெளியிடப்படும்.

wpengine

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ரிஷாதிடமிருந்து உன்னத ஈத் வாழ்த்துக்கள்

wpengine

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” – அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

wpengine