விசேட செய்தி

செயற்பாட்டுக் குழுவின் தலைவராக மஹிந்த நியமனம்!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் விஷேட சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகல் ஆரம்பமானது.

இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழு தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்த பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த தகவலை மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் யார் தலைவர் என்பதை மக்கள் தீர்மானிப்பர் என்றும் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேர்தலின்போது நடுநிலை வகிக்கவுள்ளதாக ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்த நிலையிலேயே இந்த அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

(riz)

Related posts

புறக்கோட்டையில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் எரிவு

wpengine

ரயில்வே திடீர் பணிப்புறக்கணிப்பு ஓரளவு வழமைக்கு…

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

wpengine