உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

செப்-01 நாடாளுமன்ற முதலமர்வில் ஜனாதிபதியிடமிருந்து விஷேட உரை



புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை எட்டாம் நாடாளுமன்றின் முதல் அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இக்குறித்த அமர்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்க உள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளார்.

எட்டாம் நாடாளுமன்றின் முதல் அமர்வு 1ம் திகதி 9.30 அளவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்; இம்முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.

பிரதி சபாநாயகர், அவைத்தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்டவர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார் என நாடாளுமன்றின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

(riz)

Related posts

சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்கு அழைப்பு

wpengine

பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்

wpengine