உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை…



(FASTNEWS|COLOMBO) 2019 இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டிக்கு தெரிவாகும் முதலாவது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றய தினம்(07) தகுதி பெற்றது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்க் கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து, தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

மும்பை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தன உள்ள நிலையில் அவ்வணி ஐ பீ எல் போட்டித்தொடரில் 05 ஆவது தடவையாக இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இந்தநிலையில், இன்று இடம்பெறும் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில், வெற்றி பெறும் அணியுடன் சென்னை மோதவுள்ளது. குறித்த அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சுமார் 77 இலட்சம் ரூபாய் கொள்ளை சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள் கைது..

wpengine

உத்தேச நிதி யோசனை தொடர்பான வாதங்கள் முடிவுக்கு

wpengine

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்

Azeem Kilabdeen