ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்திற்கு மாஸான ஓப்பனிங்



சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாஸு என்கிற மாசிலாமணி’ வருகிற 29 ஆம் திகதி  உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு முதலில் ‘மாஸ்’ என்று தலைப்பு வைத்திருந்தனர்.

பேய் படமாக உருவாகியிருப்பதால் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யுஏ’ சான்றிதழ்தான் அளிப்பார்கள். அதனால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதற்காகத்தான் படத்திற்கு ‘மாஸ்’ என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்திருந்தனர். ஆனால், தணிக்கை குழுவினர் சில காட்சிகளை கட் செய்துவிட்டு, படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துவிட்டனர்.

எனவே, படத்திற்கு வரிவிலக்கு பெற்றுவிடலாம் என்று ‘மாஸ்’ படத்திற்கு தமிழில் பெயர் வைக்க எண்ணினர். இதையடுத்து, படத்தில் சூர்யாவின் கதாபாத்திரமான மாசிலாமணி என்ற பெயரைச் சுருக்கித்தான் ‘மாஸ்’ என்று பெயர் வைத்தார்கள். தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்பதற்காக ‘மாஸு என்கிற மாசிலாமணி’ என்று முழுப்பெயரையும் தலைப்பாக வைத்தனர்.

இந்நிலையில், தற்போது ‘மாஸு’ என்பதை ‘மாசு’ என்று மாற்றி ‘மாசு என்கிற மாசிலாமணி’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இந்த புதிய தலைப்புடன் தற்போது போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. எனவே, ‘மாசு என்கிற மாசிலாமணி’ என்ற பெயருடனேயே சூர்யா படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது.

இதற்கான முன்பதிவு இன்று தியேட்டர்களில் தொடங்கியுள்ளது. ‘மாஸ்’ படத்திற்கு மாஸான ஓப்பனிங் இருக்கும் என சினிமா வட்டாரங்களில் நம்பப்படுகிறது.

Related posts

வஸ்தி அனுஷ்க எதிர்காலத்தில் அரசியலுக்கு….?

wpengine

இம்ரான் கானாக மறுவாரா மலிங்க

wpengine

Kylian Mbappé தமக்குக் கிடைத்த அணித்துப் பணத்தினையும் தியாகம் செய்தார்…

wpengine