விளையாட்டு

சூதாட்ட புகாரில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு தடை…



ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. தற்போது மேலும் ஒரு வீரருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் ‌ஷர்ஜீஸ்கான், காசித் லத்தீப் மீது புகார் எழுந்தது. இதையடுத்து இருவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

இந்த நிலையில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் சிக்கி உள்ளார். பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வீரராக விளையாடிய நசீர் ஜாம்ஷெத் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

Related posts

ஒரே ஆண்டில் வெளிநாட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை…

wpengine

முன்னாள் சிறந்த வீரர் டில்ஷானின் மகன் ‘டில்ஸ்கூப்’ இனால் சதம் விளாசி மீளவும் அணிக்கு..

wpengine

2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – கிரிக்கெட் வரலாற்றில் ஓர் திருப்பம்

wpengine