கேளிக்கை

சூடு பட்டு விட்டது இனியும் கிளாமராக கட்டமாட்டாராம் ரெஜினா…



அதர்வாவுடன் நடித்த “ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்” திரைப்படத்தையடுத்து, சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, ராஜதந்திரம்-2, பார்ட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா.

தெலுங்கில் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அவர் நடித்த நக்ஷ்த்ரம் என்ற திரைப்படம், கடந்த 4ஆம் திகதி வெளியானது.

குறித்த இந்தத் திரைப்படத்தில் முதன் முறையாக அதிரடியாக கிளாமரை அவர் வெளிப்படுத்தி நடித்திருந்தார் ரெஜினா. ஆனால், அந்தத் திரைப்படம் தோல்வியடைந்து விட்டது.

இந்தத் திரைப்படத்தில் ரெஜினாவின் கிளாமரும், அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதனால், கிளாமராக நடித்தால் தனது மார்க்கெட் எகிறி விடும் என்று கணக்குப்போட்ட ரெஜினா, அந்தத் திரைப்படம் தோல்வியடைந்ததோடு தனது கிளாமரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பதால், மனதளவில் கவலை கொண்டுள்ளாராம்.

அத்தோடு, இனிமேல் தேவையில்லாமல் அதிகப்படியான கிளாமராக நடித்து பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவு செய்து இருக்கிறாராம்.

 

(rizmira)

Related posts

ஓரினச் சேர்க்கையாளர் பட்டியலில் நித்யா மேனன்…

wpengine

‘ட்ரிப்’ விரைவில்

wpengine

AL AAN TV பெண் தொகுப்பாளர் மீது விசாரணை…

wpengine