கேளிக்கை

சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலையே



(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – நடிகர் சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று தனது மும்பை இல்லத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்ட நிலையில் அவர் மரணத்தில் சதி இருப்பதாக தாய் மாமா குற்றஞ்சாட்டினார்.

மேலும் சுஷாந்த் கொ லை செய்யப்பட்டார் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள Dr RN Cooper Municipal General மருத்துவமனையில் தான் பிரேத பரிசோதனை நடந்தது.

மூன்று மருத்துவர்கள் இதை மேற்கொண்டனர். அதில், சுஷாந்தின் மரணம் தற்கொலையே என கூறப்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கியதால் ஏற்பட்ட முச்சுத்திணறல் காரணமாக சுஷாந்த் மரணம் நிகழ்ந்துள்ளது என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து இன்று மும்பையில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது, ஏற்கனவே சுஷாந்தின் குடும்பத்தார் நேற்று இரவு பீகாரில் இருந்து மும்பைக்கு வந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 12 கோடி கேட்கிறாராம்

wpengine

ஆண்களின் ஆண்மையை நீக்க பிரபல தமிழ், மலையாள நடிகை கோரிக்கை..

wpengine

இளமைத் தோற்றத்தில் கலக்கும் அஜித்…

wpengine