உலக செய்திகள்

சுற்றுலா படகு மூழ்கியதில் 08 பேர் உயிரிழப்பு…


அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு ஏரியில் மூழ்கிய விபத்தில் 8 பேர்உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் சென்று கொண்டிருந்த வேளையில், ஏரியின் மையத்தில் சென்றபோது, திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏரியில் மூழ்கிய 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மூழ்கியுள்ள மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கரீபியன் கடலினை அண்மித்த பகுதியில் நிலவிய நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை…

wpengine

சவுதி அரேபியாவில் விளையாட்டு அரங்கினுள் பெண்கள் நுழைய அனுமதி…

wpengine

இலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தானிய ஜனாதிபதி

wpengine