உள்நாட்டு செய்திகள்

சுற்றிவளைப்புக்களில் 754 பேர் கைது…



(FASTNEWS | COLOMBO) – வெசாக் பண்டிகை காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த 17ம் திகதி முதல் நேற்று வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது , சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்தல் மற்றும் அதனை வைத்திருந்தல் ஆகிய குற்றங்களின் கீழ் 299 சந்தேகநபர்களும் , சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 264 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானம் மற்றும் போதைப்பொருள் மதுவரித்திணைக்களத்தால் பொறுப்பேட்கப்பட்டுள்ளது.

Related posts

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்

wpengine

சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்…

wpengine