விளையாட்டு

சுரங்கவுக்கு மீண்டும் சுகயீனம்.. அணியிலிருந்து விலகுவாரா..?



இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று(10) இடம்பெற்ற ஒருநாள் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் மீண்டும் சுகயீனமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியுடன் டெல்லியில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காற்று மாசால் சுரங்க லக்மால் சுகயீனமுற்றிருந்த நிலையில் நேற்று காலை அவர் பூரணமாக குணமடையாத நிலையில் நேற்றைய போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

விளையாட முடியுமாக இருந்தால் மாத்திரமே போட்டியில் கலந்து கொள்ளுமாறு ஏனைய வீரர்கள் அவர்களிடம் கோரியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய போட்டியில் சுரங்க லக்மால் 10 ஓவர்களை வீசி 13 ஓட்டங்களுக்கு மாத்திரமே கொடுத்து 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

ஒருநாள் போட்டிகளில் அவரின் சிறந்த பந்து வீச்சாக இது பதிவாகியுள்ள நிலையில் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

 

#reeshmaa..

Related posts

மெஸ்ஸியின் குட்டி ரசிகருக்கு கிடைத்தது அதிர்ச்சிப் பரிசு

wpengine

இங்கிலாந்துடனான போட்டியின் போது இலங்கை வீரர் பெதுமின் தலையில் பந்து தாக்கியது..

wpengine

2019 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவது தான் கனவு – ஸ்ரீசாந்த்

wpengine