உள்நாட்டு செய்திகள்

‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா…



‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபாவுக்கு மேலான தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தின் கீழ் விரைவாக அனுகூலம் பெறக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர் ஒருவர் இரண்டு இலட்சம் ரூபா காப்பீட்டைப் பெறுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ காப்பீடு, வைத்தியசாலை வசதிகள் போன்றவையும் உள்ளடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டம் கடந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அனுகூலங்கள் கோரி இரண்டாயிரத்து 200ற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் காப்புறுதி அனுகூலங்களாக 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

இரட்டை வாக்கு கோரிக்கையை ஏகமனதாய் ஏற்ற சோபித தேரர்

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

இன்று நாடாளுமன்றில் கட்சி தலைவர்கள் கூட்டம்

wpengine