உள்நாட்டு செய்திகள்

சுமார் 388 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது…


சுமார் 388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் பங்களாதேஷ் நாட்டு பெண்ணொருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 32 கிலோகிராம் 329 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த யுவதியை சோதனையிட்ட போது, ஒரு கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது,

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், இரத்மலானை பகுதியில் யுவதி தங்கியிருந்த விடுதியிலிருந்து மேலும் 31 கிலோகிராம் 329 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகநபர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பாராளுமன்றம் நாளை(30) வரை ஒத்திவைப்பு..

wpengine

பொலிஸ் செய்திகளை ஊடகங்களுக்கு வழங்க விசேட சபை

wpengine

நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள்

wpengine