உள்நாட்டு செய்திகள்

சுமார் ஒரு கோடி பெறுமதியானநாணயத்தாள்கள் மற்றும் மாணிக்ககற்களுடன் சீன பிரஜை ஒருவர் கைது…



சுமார் ஒரு கோடியே 40 இலட்சத்து 23 ஆயிரம் பெறுமதியான வௌிநாட்டு நாணய தாள்கள் மற்றும் மாணிக்ககற்களை சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து கொண்டு செல்ல முற்பட்ட சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் நீர்க்கொழும்பு பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றை நடாத்திச் செல்பவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் துபாய் நோக்கி பயணிக்க இருந்த அவரின் பயணப்பொதியை சோதனையிட்ட போது குறித்த பணத்தொகை மற்றும் மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நஸீர் அஹமட்டிற்கு எதிரான தீர்ப்பு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது – சுமந்திரன்..!

wpengine

எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை

wpengine

கொழும்பு மாநகரசபையின் உறுப்பினறான மஹிந்த கஹந்தகம கைது

wpengine