உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் இரத்து….



71வது தேசிய சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை நிகழ்வுகளை இன்றைய தினத்தில்(01) முன்னெடுக்காது இருக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவிக்கையில்;

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய குறித்த ஒத்திகை நிகழ்வுகள் இன்றைய தினம்(01) இரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர நிகழ்வின் ஒத்திகை நிகழ்வுகள் காரணமாக நேற்று(31) முதல் காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பினை அண்டிய பிரதேசங்களில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த போக்குவரகுது திட்டமானது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாததால் கொழும்பிற்கு நுழையும் அதிகளவான வாகனங்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. குறித்த நிலைமையினை கட்டுப்படுத்த ஒத்திகை நிகழ்வுகளை நாளையும் நாளை மறுதினமும் முன்னெடுக்கவுள்ளோம்” எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

மே மாதம் முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் முறைமை கட்டாயம்…

wpengine

தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டார்

wpengine

சஹ்ரான் உடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய இருவர் கைது

wpengine