ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சுசில் பிரேமஜயந்த ‘மொட்டு’ களத்தில் கைகோர்க்கிறாரா…



ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று(14) மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனைகளை முன்வைக்க சிலர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறும் போது குறித்த இடத்திற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வந்துள்ளார்.

அவரின் வருகையானது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து யோசனையினை முன்வைக்க அமைந்ததாகவும், எனினும் அங்கிருந்த கூட்டு எதிர்கட்சியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rizmira

Related posts

மலேசிய பிரதமர் கோமாளியாக… (Photos)

wpengine

தஹாம் சிறிசேனவுக்கு நாளை(09) டும் டும்…

wpengine

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி; பிரதமர், தலைவராக நீங்களே இருங்கள் – சஜித்

wpengine