உள்நாட்டு செய்திகள்

சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு: பொது மக்கள் பாதிப்பு



இன்று (27) சுகாதார அமைச்சுக்கு முன்பாகதமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்னர்

நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்க
-ரிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

30 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 40,000 ஊழியர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்
-கை சுவசேவா சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பணி பகிஷ்கரிப்பினால் வைத்தியசாலைகளின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருசில பிரதான வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக இராணுவத்தின
-ரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்
-திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த
பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்.

Related posts

21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்து பிரதமர் தலைமையில் விசேட சந்திப்பு

News Editor

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று

wpengine

தென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

wpengine