உள்நாட்டு செய்திகள்

சீரற்ற பொலித்தீன் – இலங்கையில் நெருக்கடி நிலை…



சீரற்ற பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை காரணமாக இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகி வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

பொலித்தீன் உற்பத்திகள் உரிய தராதரங்களுக்கு அமைய பயன்படுத்தப்படாததன் காரணமாக பெரும் சுற்றாடல் நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 மைக்ரோனை விட தடிப்புக்குறைந்த பொலித்தீனை தடைசெய்து அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் இன்று முறையற்ற பொலித்தீன் பாவனை இடம்பெறுவதாக விவசாய ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 09 மணி நேர நீர் விநியோக தடை…

wpengine

வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடம் திறப்பு [VIDEO]

wpengine

பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் களனி பல்கலைக்கழகம் – சர்வதேச சமூகத்தை அவதானிக்குமாறும் கோரிக்கை..!

wpengine