உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – 24 ஆம் திகதி வரை நீடிக்கும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பெரும்பாலான இடங்களில் பெய்துவரும் அடை மழை காரணமாக நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஜின்கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தவளம மற்றும் பத்தேகம ஆகிய பிரதேசங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக காலி மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர் ஒருவர் கைது

wpengine

அமைச்சரவை நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை

wpengine

தாஜுதீன் கொலை குறித்த காணொளிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பு

wpengine