உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு



மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மின்னுற்பத்தி நீரேந்து பகுதிகளில் நீரின் அளவு உயர்ந்துள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், லக்ஷபான, கெனியன், மவுசாகலை மற்றும் மேல் கொத்தமலை நீர்தேக்கங்களின் நீர்மட்டங்களும் உயர்வடைந்துள்ளன.

மேலும், மழைவீழ்ச்சி தொடர்ந்து பதிவாகுமாயின் காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும்,  கரையோர பகுதிகளை சேர்ந்த நோட்டன், ஒஸ்போன், பம்பரகல, கிளவட்டன் பிரதேச  மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை…

wpengine

முதலீட்டு சபையின் தலைவர் பதவி இராஜினாமா..

wpengine

ஒருகொடவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

wpengine