உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பெய்து வரும் மழையால் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ற வகையில் அறுவடை இல்லாததால், காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கிராம் போஞ்சி ரூ.480, முருங்கை காய் ரூ.720, கேரட் ரூ.240, மிளகாய் ரூ.440, பீட்ரூட் ரூ.400, தக்காளி ரூ.240, பச்சை மிளகாய் ரூ.400, புடலங்காய் ரூ.320, பூசணி ரூ.160, கத்தரிக்காய் ரூ.240, முட்டைகோஸ் ரூ.240, வெண்டைக்காய் ரூ.400, மரவள்ளி கிழங்கு ரூ.200 என விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலை உயர்வால் நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Related posts

அதிபர் போட்டிப் பரீட்சையில் போதியளவானவர்கள் சித்தியடையவில்லை – அகில பதிலடி..?

wpengine

மேலும் 219 பேர் வீடுகளுக்கு

wpengine

வெளிவிவகார அமைச்சர் குவைட் தூதரகத்திடம் கோரிக்கை

wpengine