உலக செய்திகள்

சீன ஜனாதிபதியின் அறிவிப்பால் தைவானில் போர் பதற்றம்…


தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்று சீன அதிபர் சி ஜின்பிங் அறிவிப்பால் தைவானில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனா அருகே தைவான் நாடு உள்ளது. இந்த நாடு அமைந்துள்ள இடம் ஒரு தீவு ஆகும். ஒரு காலத்தில் தைவான் சீனாவின் அங்கமாக இருந்தது. அங்கு நடந்த உள்நாட்டு பிரச்சினை காரணமாக தைவான் தனி நாடாக மாறியது.

சீனா தொடர்ந்து தைவான் தங்களது நாட்டின் பகுதி. அதை எங்கள் நாட்டோடு இணைப்போம் என்று கூறி வந்தது.

இந்த நிலையில் நேற்று சீன அதிபர் சி ஜின்பிங் கூறும்போது, தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனாவுடன் இணைப்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். தைவானும், சீனாவும் ஒரே நாடுதான்.

எனவே, தைவான் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.

இதற்கு எங்களது நாடு இறையாண்மை கொண்டது. யாரையும் கைப்பற்ற விட மாட்டோம் என்று தைவான் கூறி உள்ளது.

சீன அதிபரின் மிரட்டலால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தைவான் ஏற்கனவே சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் தனது ராணுவத்தை எப்போதும் தயாராக வைத்திருந்தது. இப்போது சீன அதிபரின் மிரட்டலால் மேலும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது.

சீனா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related posts

கலிபோர்னியா காட்டுத் தீ – அவசரகாலநிலை பிரகடனம்

wpengine

அமேசன் காடுகளில் வரலாறு காணாத தீ

wpengine

ISIS அமைப்பின் தலைவர் ஓமர் உயிரிழந்துள்ளதாக அவ்வமைப்பு உறுதி

wpengine