உலக செய்திகள்

சீன மற்றும் வட கொரிய அதிபர்கள் இன்று சந்திப்பு



(FASTNEWS|COLOMBO) – சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று வட கொரியாவில் சந்திக்கவுள்ளார்.

2005ஆம் ஆண்டிலிருந்து சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறை.

இவர்களின் சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் குறித்தும், பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியான சீன அந்நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாக கருதப்படுகிறது.

ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு ஒரு வார காலம் முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஜி20 மாநாட்டில் ஷி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

27 ஆண்டுகளுக்குப் பின் ஈராக்கிற்கு நேரடி விமான சேவை…

wpengine

ஓர் பாலின திருமணம் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது

wpengine

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு…

wpengine