உலக செய்திகள்

சீனாவில் காட்டுத் தீயில் சிக்கி 19 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங்கில் பண்ணை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக அருகில் உள்ள மலைப்பகுதிக்கும் வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதில் சிக்கிய அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவரும், தீயணைப்பு வீரர்கள் 18 பேரும் உயிரிழந்தனர்.

தீயை அணைக்கும் பணியில் 2,000கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

wpengine

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் எட்டு பேருக்கு விடுதலை…

wpengine

இத்தாலியை தாக்கிய புயல்…

wpengine