உலக செய்திகள்

சீனாவின் பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் சுங்க வரி…



சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் சுங்க வரி விதிக்க அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“சீனாவின் வர்த்தக நடவடிக்கை முறையற்றது. நமது விவசாயிகள் மற்றும் பொருள் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக ரூ.7 லட்சம் கோடி சுங்க வரி விதிக்கும்படி அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கடந்த வாரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1,300 பொருட்களுக்கு அமெரிக்கா 25% கூடுதலாக சுங்க வரி விதித்திருந்தது.

அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சோயா, பீன்ஸ், ஆரஞ்சு ஜூஸ், விமான உதிரிபாகங்கள் உள்பட 106 பொருட்களுக்கு சீனா கூடுதலாக சுங்க வரி விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் எட்டு பேருக்கு விடுதலை…

wpengine

காணாமற்போன மீனவர்களை தேடச் சென்ற பீச்கிராஃப்ட் விமானம்

Azeem Kilabdeen

அமெரிக்காவிலும் புகுந்தது ஒமிக்ரோன்

wpengine