உள்நாட்டு செய்திகள்

சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி.



நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்று மாலை நான்கு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா,ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் ஷூரா கவுன்சில்,அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி,வை.எம்.ஏ. ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகம் சம காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,கடந்த காலங்களில் இடம்பெற்ற இனவாத  கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமை, முஸ்லிம்களின் கல்விப்பிரச்சினைகள் ,எதிர்வரும் ஹஜ் பண்டிகை தினத்தில் குர்பான் கொடுப்பது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி அதற்ககான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்

Related posts

பூஸ்டருக்கு WHO அனுமதி

wpengine

UPDATE : சிலி 25ம் திகதி வரை விளக்கமறியலில்..

wpengine

பிரதமர் : குறைந்தது 70 வீத வாக்களிப்பு

wpengine