Top Story 2உள்நாட்டு செய்திகள்

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, புத்தளம், களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை(16) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதுடன், மீண்டும் நாளை(16) மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, புத்தளம், களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மே மாதத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை…

wpengine

தென்கொரிய ஜனாதிபதி கைது!

Azeem Kilabdeen

லசித் மலிங்கவின் இடத்திற்கு ஜெரோம் டெய்லர் இணைப்பு

wpengine