உள்நாட்டு செய்திகள்

சில பகுதிகளில் 100 மி.மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், ஏனைய சில பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

Related posts

25 வகையான மருந்துக்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பு…

wpengine

05 மீனவர்கள் கைது

wpengine

லங்காபுர பிரதேச செயலகம் மீண்டும் திறப்பு

wpengine