உள்நாட்டு செய்திகள்

சில பகுதிகளில் 100 மி.மீற்றர் வரையான பலத்த மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காலி, மாத்தறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடகிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிற்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, வடகிழக்கு மற்றும் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களில் அவ்வப்போது பலமான காற்று வீசக்கூடுவதுடன் பலத்த மழைவீழ்ச்சியும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இந்நிலையில், ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் 22ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

வஸீம் தாஜுதீன் படுகொலை வழக்கு ஒத்திவைப்பு (2ம் இணைப்பு)

wpengine

இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையச்செய்துள்ளது

wpengine

இதுவரையில் 93,133 பேர் குணம்

wpengine