ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

சில நிமிடம் கல்முனை நகரமே ஸ்தம்பிதம்; மக்கள் பாதுகாப்பான இடம்நோக்கி ஓட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்முனை நகரில் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக நகரம் முழுவதும் தூசியால் மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நகரம் முழுவதும் தூசியால் மறைந்த நிலையில் 15 நிமிடங்கள் வரை இந்த நிலைமை நீடித்துள்ளது. குறித்த 15 நிமிடமும் நகரமே ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

கல்முனை நகரின் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அதிக தூசி மற்றும் மணல் காரணமாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் வீதியில் பயணித்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வாகன நெரிசல்..

wpengine

வறட்சியால் சேதமடைந்த பயிர்களுக்கு தீ வைத்தால் இழப்பீடு இல்லை..!

wpengine

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine