உள்நாட்டு செய்திகள்

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

அரசாங்கத்தின் மொத்த வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயர்வு – நிதி அமைச்சு

wpengine

விற்பனை நிலையம் ஒன்றில் தீ – தந்தையும் மகளும் பலி

wpengine

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் அரசுக்கு எதிராக சிவப்புச் சமிஞ்சை…

wpengine