உள்நாட்டு செய்திகள்

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி



(FASTNEWS|COLOMBO) – நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

அதன்படி மேல் , தென் , மத்திய , சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

Related posts

மதிய போசனம் – இங்கிலாந்து அணியானது 102 ஓட்டங்கள்…

wpengine

´மக்களின் மகிமை´ ஆர்ப்பாட்ட பேரணி மதியம் 12 மணிக்கு…

wpengine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

wpengine