ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறையில் அடைத்தாலும் அச்சமில்லை – குமுறிய பாராளுமன்ற உறுப்பினர்



எம்மீது எத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தினாலும் பரவாயில்லை, நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

நல்லாட்சி… நல்லாட்சி… என மார்தட்டிக்கொள்கின்றீர்கள் ஆனாலும் வெட்கம் இல்லாத நல்லாட்சியே இது.

பொலிஸ்மா அதிபர் மேலிடத்தின் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை விடுதலை செய்வார். அதே போன்று பொய்யான பல குற்றச் சாட்டுகளை எம் மீது சுமத்தி சிறையில் அடைக்கவும் துணிந்து விடுவார்.

அப்படி குற்றம் சுமத்தி எம்மை சிறையில் அடைத்தாலும் எமக்கு கவலை இல்லை, எதற்கும் நாம் அச்சமடைய போவதில்லை.

நல்லாட்சியின் ஆடைகளை களையும் முகமாக பொலிஸ்மா அதிபர் செயற்பட்டு வருகின்றார். இதுவா பொலிஸ் மா அதிபரின் சேவை?

ஆம் சேர்.. இல்லை சேர்… விடுவிக்கப்படுவார்.. சேர்… இப்படி சேர் போடும் நல்லாட்சியின் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் பொலிஸ் மா அதிபரே இப்போது பதவில் உள்ளார் எனவும் மகிந்தானந்த குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாந்தி எடுத்ததால், மாணவி கர்ப்பிணி என பாடசாலை நிர்வாகம் தீர்மானம்.. – மருத்துவ பரிசோதனையில் தோல்வி..

wpengine

9 வயது சிறுவன் தற்கொலை

wpengine

கட்சித் தலைமையினை விட்டுச் செல்லத் தயார்… – ஹம்பாந்தோட்டையை விட்டும் சஜித் வெளியேறுகிறார்…

wpengine