உலக செய்திகள்

சிறைச்சாலைக்குள் தீ விபத்து 68 பேர் உயிரிழப்பு…



வெனிசுலா நாட்டின் வாலன்சியா நகரில் உள்ள சிறை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இக்கலவரத்தில் கைதிகளுடன் கைதிகளைப் பார்வையிடவந்த பெண்கள் இருவரும் உயிரிழந்ததாகவும் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் கலவரத்தின்போது பொலிஸ் நிலையத்தைச் சுற்றிவளைத்த மக்களைப் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையினுள் பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதோடு கலவரத்தை பொலிஸார் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

பசுபிக் தீவில் பாரிய நில நடுக்கம்.

wpengine

ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிங்யா மக்கள் கொல்லப்பட்டனர்…

wpengine

அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…

wpengine