உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறைச்சாலைகள் அனைத்திற்கும் CCTV கெமராக்கள்..


நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் அனைத்திற்கும் சீ.சீ.டீ.வி கெமரா பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் மஹர மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளிலேயே முதன்முதல் பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க முடியும் என்றும்,இதற்கு தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் பல்கலைக்கழகங்களின் ஊடாக பெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அடுத்த வருடம் இந்த சீ.சீ.டீ.வி கெமராக்கள் பொருத்தும் நடவடிக்கை சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை

wpengine

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான அவசர அறிவிப்பு

News Editor

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வி.ஐ.பிக்களின் நிலைஎன்ன?

wpengine