உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலைகள் அதிகாரிகள் 05 பேர் இடைநீக்கம்…



வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கடந்த 05ம் திகதி தப்பியோடிய, போதைப்பொருள் வர்த்தகர், நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளனவென சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கைதி, தப்பிச் செல்வதற்கு உதவி ஒத்தாசை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், சிறைச்சாலைகள் அதிகாரிகள் ஐவர், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்ஹ தெரிவித்தார்.

தப்பியோடுவதற்காக, சிறைச்சாலைக்குள்ளிருந்து கைதிக்கு ஆதரவு கிடைத்துள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைதாகுவதற்கு முன்னர் அவரிடமிருந்து 11.5 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் வங்கி – இலங்கை வங்கி ஆகியவை தனியார் மயமாகிறது..

wpengine

முல்லைத்தீவில் வெள்ளத்தால் 3,800 பேர் பாதிப்பு..!

wpengine

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை

wpengine